பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

சனி, 12 ஜனவரி, 2013

பொங்கல் நல்வாழ்த்துக்கள்


தமிழ் நாட்ல பொங்கல் திருநாள்  4 நாளுக்கு  ரொம்ப சிறப்பா கொண்டாடுறோம்.இது ஒரு முக்கியமான பண்டிகையும் கூட.

சூரியனோட வடக்கு நோக்கி பயணத்த தான் இந்த திருநாள் குறிக்குது.இதுக்கு 'மகர சங்கராந்தி'-னும் பெயர் இருக்கு.அதாவது சூரியன் மகர ராசியில நுழையுற நாள்.இந்த நாளுலதான் சூரியன் வடக்கு நோக்கி திரும்புது.

புராணத்துல சொல்லனும்னா.பிதாமகர் பீஷ்மர் இந்த நாளுக்காக காத்துருந்து உயிர் விட்டார்னு மகாபாரதத்துல சொல்லப்பட்டு இருக்காம்.

நமக்கு எல்லா நல்லதையும் குடுக்குற இயற்க்கைக்கு விவசாயிகள் நன்றி சொல்ற விழாவா தமிழ்நாட்டில இத சொல்றோம். பொங்கல்னா 'கொடித்தல்' -னு ஒரு அர்த்தம் இருக்கு அப்படினா, அரிசியில் செய்ற சிறப்பான ஒரு உணவை குறிக்குமாம்.

தமிழர் திருநாள்னு சொல்லப்படுற இந்த பொங்கல் தினம் தை மாசம் பிறக்குற நாளில் கொண்டாடப்படுது.இந்த மாசத்துல துன்பால் எல்லாம் போய் வாழ்க்கை வளமா இருக்கும்னு மக்கள் நம்பிக்கை.தை பிறந்தா வழி பிறக்கும்னு ஒரு பழமொழி கூட இருக்கே.(உண்மையா இந்த பழமொழிக்கு அர்த்தம் ,அந்த காலத்துல ரோடு எல்லாம் இல்லாதப்போ ,தை மாசம் அறுவடைக்காக வழி எல்லாம் மறைக்குற அளவுக்கு நிலத்துல நெல்,பயிர்,கரும்பு எல்லாம் வளந்துருக்கும் அதனால பாதைகள் மறஞ்சிருக்கும் ,தை மாசம் பொறந்தா அறுவடை முடிஞ்சு நிலம் சுத்தமா இருக்கும் பாதை தெரியும்னு சொல்றதுக்காக அப்படி சொன்னங்கன்னு எங்கயோ கேள்விப்பட்ட நியாபகம்).

சரி அந்த நாலுநாள் கொண்டாட்டம் என்ன என்ன?

முதல் நாள் போகி.அதாவது மார்கழி மாசத்தோட கடைசி நாள்.'பழையன
கழிதலும் ,புதியன புகுதலும்' னு சொல்வாங்க.இந்த தினத்துல உபயோகள் இல்லாத பழைய பொருள் தூக்கி போட்டுட்டு,
புதுசா வாங்குவாங்க.பழைய பொருள் ,பழைய விறகு எல்லாம் 
போட்டு நெருப்பு மூட்டி அதை சுத்தி குழந்தைகள் ,பெண்கள் எல்லாம் பாட்டு பாடி உடுக்கை 
அடிச்சு ஆடுவாங்க.வீட்ட சுத்தம் பண்ணி,கலர் அடிப்பாங்க. 


ரெண்டாவது நாள் ,பொங்கல் பண்டிகை.இந்த நாளுல விவசாய மக்களோட வாழ்க்கைக்கும் ,வளத்துக்கும் அடிப்படையா இருக்குற சூரியனுக்கு பூஜா செஞ்சு நன்றி சொல்வாங்க.வீட்ல சூரிய ஒளி படுற இடத்துல கலர் கூலம் போட்டு ,அடுப்பு அமைச்சு ,மன்னால செஞ்ச பானைல மஞ்சள் குருத்து சுத்தி,புதுசா விளைஞ்ச அரிசிய இந்த பானைல போட்டு பால் ஊத்தி சமைப்பாங்க.கரும்பு,தேங்காய்,பூ,பழம்,வெத்தல,பாக்கு எல்லாம் வச்சு பூஜா பண்ணுவாங்க.பால் பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல்-னு
எல்லாரும் சொல்வாங்க.இது எல்லாத்தையும் சூரிய பகவானுக்கு வச்சு கும்பிடுவாங்க.புது டிரஸ் போடுவாங்க,வெண்பொங்கல் ,சக்கர பொங்கல் இதுதான் அண்ணைக்கு ஸ்பெஷல்.

மூணாவது நாள் ,மாட்டு பொங்கல்.விவசாயிகளோட வாழ்வுக்கும்,வளத்துக்கும் துணையா இருக்குற மாட்டுக்கு நன்றி சொல்ற நாள் தான் இது.மாடுகளுக்கு குளிப்பாட்டி,குங்குமம்,சந்தனம்,
மலர்மாலை,மஞ்சள்னு இது அலங்கரிச்சு கும்பிடுவாங்க.மாடுகளுக்கு பொங்கல்,கரும்புனு எல்லாம் குடுத்து சாப்ட சொல்வாங்க.மாடுகளுக்கு ஆரத்தி எடுப்பாங்க.நோய் நொடி இல்லாம பலநாள் வாழனும்னு மாடுகள வாழ்த்துவாங்க.மாட்டு பொங்கல் அன்னைக்கு பல இடத்துல ஜல்லிக்கட்டு நடக்கும்.இந்த நாளை 'கணுப்பண்டிகை'-னும் சொல்வாங்க.வீட்டு முற்றத்திலையோ இல்ல மொட்டை மாடியிலையோ மஞ்சள் இலை போட்டு அதுல முன்னாடி நாள் செஞ்ச வெண் பொங்கல்,சர்க்கரை பொங்கல், எல்லாம் வச்சு பரிமாறுவாங்க.சிவப்பு,மஞ்சள் கலர்ல சோறு சின்ன சின்ன உருண்டையா வச்சு கரும்பு துண்டு,மஞ்சள் கிழங்கு,வெத்தல ,பாக்கு வாழப்பழ துண்டு எல்லாம் பரிமாறுவாங்கலாம். பெண்கள் அவனக் உடன்பிறந்த சகோதரர்கள் அவங்க குடும்பம் எல்லாம் நல்லா இருக்கணும்னு வேண்டி வணங்குறாங்க.மஞ்சள் நீரால ஆரத்தி எடுப்பாங்க.கிராமத்துல பலவிதமான உணவு செஞ்சு எடுத்துகிட்டு போய் ஆத்தங்கரையிலையோ ,குளத்தங்கரையிலையோ, எல்லாம் சேந்து சாப்பிடுவாங்க.


நாலாவது நாள் ,காணும் பொங்கல் அன்னைக்கு எல்லாரும் குடும்பத்தோட,நண்பர்கள் வீட்டுக்கோ,கடற்க்கரைக்கோ,நதிக்கரைக்கோ,சுற்றுலா கண்காட்சிக்கோ,பூங்காக்களுக்கோ இதுமாதிரி எதாவது பொது இடத்துக்கு போய் சந்தோசமா பேசி விளையாடி பொழுதை போக்குவாங்க.


இந்த பண்டிகையை நாடு முழுசும் எந்த எந்த பெயர்ல சொல்றாங்கன்னு தெரியுமா?

உத்திர பிரதேசம் உள்ளிட்ட வாடா மாநிலத்துல ,அப்பறம் குஜராத்,மகாராஷ்டிரா ,ஆந்திரா,கர்நாடகா,கேரளா போன்ற மாநிலத்துல மகர சங்கராந்தி கொண்டாடப்படுது.பஞ்சாப்ல இது லோஹ்ரினும் ,வங்காளம்,அஸ்ஸாம் மாநிலத்துல பொகாலி பிஹூ-னும் சொல்றாங்க.

மகர சங்கராந்திக்காக பல இடத்துல மேளாக்கள்-னு சொல்ற விழாக்கள் கொண்டாருறாங்க.இதுல ரொம்ப புகழ் பெற்றது கும்ப மேளா.12 வருஷத்துக்கு ஒரு தடவ கங்கை,யமுனை,சரஸ்வதி புண்ணிய நதி எல்லாம் ஒன்னு சேருற பிரயாக் எனும் அலகாபாத்துல கும்ப மேளா நடக்கும்.கோடிக்கணக்கான பத்தர்கள் இந்த நாளுல புனித நீராடுவாங்க.

வட இந்தியாவுல பெரும்பாலான இடத்துல இந்த பண்டிகையை காற்றாடி பறக்கவிட்டு கொண்டாடுறாங்க.பல வடிவத்துல ,வண்ணத்துல இருக்குற இந்த காற்றாடி பகல் முழுக்க பறக்க விடுறாங்க.ராத்திரி  ஆனதும்  மெழுகுவர்த்தி பொருத்தப்பட்ட பல காற்றாடிகல வானத்துல பறக்கவிட்டு ஆகாயத்தையே வெளிச்சமாக்குறாங்க.

இதுதான் பொங்கலோட நாலுநாள் கொண்டாட்டம்.
ஆனா நெஜமாவே இதுமாதிரியா நாம இப்போ கொண்டாடுறோம்.காலத்துக்கு ஏத்தமாதிரி ஸ்டைலா ரொம்ப சிரமம் இல்லாம கொண்டாடுறோம்.பொங்கல் அன்னைக்கு பொங்கல் பத்தி இருக்குற நினப்பவிட டி.வி -ல என்ன என்ன ப்ரோக்ராம் போடுறாங்கனு தான் அதிகமா யோசிக்குறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக